மாநில செய்திகள்

தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது -முதல் அமைச்சர் வேண்டுகோள் + "||" + In the field of information technology

தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது -முதல் அமைச்சர் வேண்டுகோள்

தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது -முதல் அமைச்சர் வேண்டுகோள்
தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை மாநாட்டில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.
சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை தொடர்பான 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கடந்த ஆண்டு நான் தொழில் அதிபர்களை கேட்டுக் கொண்டேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதலீடு செய்துள்ள, முதலீடு செய்ய முன்வரும் தொழிற்துறையினருக்கு நன்றி. முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி அழைக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது.

புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மிகப்பெரிய நிறுவனங்களின் கிளைகளும் சென்னையில் உள்ளன.

கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு கிடைத்துள்ளது.  தமிழகத்தில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மாநில தகவல் குடும்ப தொகுப்பு உருவாக்கப்படும்.

அதிக அளவில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது  என கூறினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்போசிஸ் நிறுவனம் செலவினங்களை குறைத்து வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

காக்னிசன்ட் நிறுவனம், செலவினங்களை குறைக்கும் வகையில் சமீபத்தில் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்த நிலையில், தற்போது இன்போசிஸ் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கி உள்ளது.

இதை தொடர்ந்து தான் முதல்வர் பழனிசாமி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை
சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலைகுறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
2. ஜெயலலிதாவின் ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது- எடப்பாடி பழனிசாமி
நாங்குநேரி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
3. அ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்
அ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
4. தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பதுக்கலா? லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அங்குள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு உள்ளதா? என்று நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.
5. அ.தி.மு.க. ஆட்சியை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
‘தி.மு.க. ஆட்சியில் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. அ.தி.மு.க. ஆட்சியை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை