தேசிய செய்திகள்

ஆந்திராவில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் குழந்தை பலி + "||" + Andhra Pradesh: Infant dies after TV set falls on her at home

ஆந்திராவில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் குழந்தை பலி

ஆந்திராவில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் குழந்தை பலி
ஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலியானது.
ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்‌ஷ்மி என்பவர் நேற்று தனது 11 மாத குழந்தை மோகாரினிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்.

உணவை சாப்பிட மறுத்த குழந்தை அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது வீட்டின் உள்அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் வயரை தவறுதலாக  இழுத்ததில் அது குழந்தையின் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைப்பு
ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.
2. ஆந்திராவில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை -புதிய மசோதா நிறைவேற்றம்
பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் புதிய மசோதா ஆந்திரா சட்டசபையில் நிறைவேறியது.
3. 3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை; லாவகமாக பிடித்த பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ
3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை லாவகமாக அங்கிருந்த பொதுமக்கள் பிடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4. ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்; பிறந்த குழந்தை உள்பட 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலில் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பெண், பிறந்த குழந்தை உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
5. ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்
ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.