மாநில செய்திகள்

மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிப்பு ; பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர் + "||" + And a Tiruvalluvar statue is insulting The BJP cleansed and worshiped

மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிப்பு ; பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர்

மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிப்பு ; பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர்.
சென்னை

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் தென்னிந்திய வள்ளுவர் குல சங்கம், திருவள்ளுவர் தெருவாசிகள் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது.

கடந்த 6-ந் தேதி இந்த திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்தனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினை முடிவதற்குள் தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம்  பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை மீது ஒருவர் மர்ம பொருளை வீசிச் சென்றார். அந்த சிலையை பாஜகவினர் நீர் ஊற்றி சுத்தம் செய்தனர். பின்னர் பால் ஊற்றி பூஜை செய்தனர்.  பாஜகவைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்
பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார். அதை அவர்கள் மறந்து விட்டனர். பாஜகவினர் நன்றி கெட்டு சுற்றுகிறார்கள் என சிவசேனா பாஜகவை விமர்சித்து உள்ளது.
2. மராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பாஜக
மராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது என பாரதீய ஜனதா கூறி உள்ளது.
3. பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு 92-வது பிறந்தநாள்: பிரதமர் நேரில் வாழ்த்து
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி 92-வது பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
4. ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது: சிவசேனா விமர்சனம்
ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
5. திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: தி.மு.க. ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்ததை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.