மாநில செய்திகள்

போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை -கமல்ஹாசன் பேச்சு + "||" + I am not into politics with no way to go - Kamal Haasan

போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை -கமல்ஹாசன் பேச்சு

போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை -கமல்ஹாசன் பேச்சு
நடிகர் கமல்ஹாசனன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.
ராமநாதபுரம்,

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரான கமல்ஹாசன் இன்று தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது ரசிகர்கள் மற்றும் கட்சியினருடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

விழாவின் போது தனது தந்தை சீனிவாசனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த அவர் தனது ரசிகர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர்,  “போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என பலருக்கு தெரியும். நான் அரசியலுக்கு வருவதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தொழிலாளியாக இல்லாமல் வேலை தருபவராக மாற வேண்டும். பல தொழில்களுக்கு வேலையாட்கள் இல்லை என்ற நிலையும் இருக்கிறது.

துப்புரவுப் பணிக்கு பி.ஹெச்.டி படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. வேலைக்காக இங்குள்ளவர்கள் இடம்பெயர்ந்து செல்லக் கூடாது.

நான் சலூன் கடையில் ஒன்றரை மாதம் வேலை பார்த்திருக்கிறேன், எந்த  தொழிலும் கீழானது இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா காந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து
பிரியங்கா காந்தியின் பிறந்தநாளான நேற்று காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
2. மக்கள் பாராட்டால்தான் நடிகர்களுக்கு சம்பளம் அதிகரிக்கிறது; கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
3. தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான் - கமல்ஹாசன்
தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
4. மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக மகளின் பிறந்தநாளை மயானத்தில் கொண்டாடிய காங்கிரஸ் பிரமுகர்
மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக, மகளின் பிறந்தநாளை மயானத்தில் காங்கிரஸ் பிரமுகர் கொண்டாடிய வினோத சம்பவம் பெலகாவி அருகே அரங்கேறி உள்ளது.
5. திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது ; மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னையில் நாளை மறுநாள் நடக்கும் திமுக பேரணியில் பங்கேற்க மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை