உலக செய்திகள்

பாகிஸ்தான் பல் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை + "||" + Pak Hindu girl student raped and murdered, reveals autopsy report

பாகிஸ்தான் பல் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை

பாகிஸ்தான் பல் மருத்துவ கல்லூரி  மாணவி பாலியல் பலாத்காரம் செய்து  கொலை - இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை
பாகிஸ்தானில் பல் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கராச்சி

பாகிஸ்தான் சிந்த் மாகாணம், லார்கானாவில் நம்ரிதா சாந்தினி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண், விடுதியில் தங்கியிருந்து பல் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் விடுதி அறையில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். அறை பூட்டப்பட்ட நிலையில், கழுத்தில் கயிறு இருகி, கட்டிலில் அவர் உயிரிழந்து கிடந்தார். 

அதே நேரத்தில், இந்த சம்பவத்தை கண்டித்து கராச்சியின் பல்வேறு இடங்களில் மக்கள்  போராட்டங்களில் ஈடுபட்டனர். முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்  தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தற்போது இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில்  மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார் என அதில் கூறப்பட்டு உள்ளது.

இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையை  சண்ட்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெண் மருத்துவ-சட்ட அதிகாரி  டாக்டர் அமிர்தா நேற்று  வெளியிட்டார்.  மாணவி சாந்தினி  கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என  அதில் கூறப்பட்டு உள்ளது

முந்தைய பிரேத பரிசோதனை அறிக்கை பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது மற்றும் முக்கிய உண்மைகளைத் மறைத்து விட்டதாக கராச்சியில் உள்ள சுகாதாரத் துறையின் மருத்துவ-சட்டப் பிரிவின் வல்லுநர்களும் அதிகாரிகளும் குற்றம்சாட்டி இருந்தனர்.

தற்போதைய பிரேத பரிசோதனை அறிக்கையில்   டிஎன்ஏ சோதனையில்  இறந்தவரின் ஆடைகளில் ஆண் விந்து  இருப்பதை  உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில் கட்டாய பாலியல் செயலுக்கு பிறகு  முக்கிய பகுதி  துணியால் துடைக்கப்பட்டு உள்ளது.

15 அடி உயரமுள்ள  ஒரு  மின் விசிறியில் ஐந்து அடி உயரமுள்ள ஒரு பெண் எப்படி தூக்கில் தொங்கினார்  என்பதும் கேள்விக்குறியாக உள்ளது என கூறி உள்ளது.