தேசிய செய்திகள்

அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மராட்டிய ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு + "||" + Mumbai: A Bharatiya Janata Party (BJP) delegation met Governor Bhagat Singh Koshyari today.

அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மராட்டிய ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மராட்டிய ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு
அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மராட்டிய ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டசபை  தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தன்னுடைய அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் செய்தி வெளியிட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, சிவசேனா எம்.எல்.ஏக்களை 2 நாட்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்க அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. 

இதனால், மராட்டிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கு மத்தியில், மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜக நிர்வாகிகள் கிரிஷ் மகாஜன், சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முன்காண்டிவார் மற்றும் ஆஷிஸ் செலார் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மராட்டியத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் விளக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நிபந்தனைகளை ஏற்றால் மீண்டும் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி- உத்தவ் தாக்ரே சூசகம்
முதல்-மந்திரி பதவியில் பங்கு தந்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் உத்தவ் தாக்கரே பேசினார்.
2. சிவசேனாவுக்கு முதல் மந்திரி பதவி வழங்குவதாக கட்சித்தலைமை கூறியதா? தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்
மராட்டியத்தில் பாஜக- சிவசேனா இடையே அதிகாரப்பகிர்வில் உடன்பாடு எட்டப்படாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
3. ஆளுநரை தனித்தனியே சந்திக்க பாஜக, சிவசேனா முடிவு எனத்தகவல்
மராட்டிய சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
4. பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை - துஷ்யந்த் சவுதாலா
பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அரியானாவில் கிங்மேக்கராக உருவெடுத்துள்ள துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.
5. பாஜக வெற்றி பெற புல்வாமா போன்ற தாக்குதல் தேவைப்படும் - சரத்பவார்!
மராட்டிய தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமானால் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.