தேசிய செய்திகள்

சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை + "||" + Central Government Circular for State Governments to Actively Monitor Law and Order

சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வுபெறுவதால் அதற்கு முன்னர் தீர்ப்பை பிறப்பிக்க உள்ளார்.

இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்படி அந்த சுற்றறிக்கையில்  வலியுறுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு மட்டும் பாதுகாப்புக்காக 4,000 மத்திய போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதம் - மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. அலுவலகங்களில் கொரோனா தொற்று இருந்தால் மூட வேண்டாம்: மத்திய அரசு
கொரோனா தொற்று இருந்தால் அலுவலகங்களை மூட வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. மத்திய அரசின் 2-வது கட்ட சலுகைகள் - விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன்; வீட்டுக்கடனுக்கு மானியம் நீட்டிப்பு
கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
4. மத்திய அரசு அறிவித்த சலுகைகளில் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏதுமில்லை - ப.சிதம்பரம் சாடல்
மத்திய அரசு அறிவித்த சலுகை திட்டங்களில் ஏழைகளுக்கும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஏதும் இல்லை என்று ப.சிதம்பரம் சாடினார்.
5. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவின.