சினிமா செய்திகள்

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் + "||" + Kamal Haasan celebrating his birthday with family members

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன்

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன்
பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை

இன்று  தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கமல்ஹாசன் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அன்பான வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார். கமல் தனது பிறந்தநாளை  குடும்பத்துடன் கொண்டாடினார்.



கமல் தனது 65- வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசிய கமல், சொந்தமண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து தந்தையின் சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.



கமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

கொண்டாட்டத்தில் அவரது சகோதரர் சாருஹாசன், மருமகள் சுஹாசினி மணிரத்னம், மகள்கள் சுருதி மற்றும் அக்ஷராஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



ஏற்கனவே கமல்ஹாசன் - பூஜா குமார் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது கமல்ஹாசன் குடும்ப உறவினர்களுடன் பூஜா குமார் இருக்கும் புகைப்படம் பேசுபொருளாகி இருக்கிறது.



பூஜா குமார் எப்போது கமலின் குடும்ப உறுப்பினர் ஆனார் என்ற கேள்விகளையும் சமூக வலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 46-வது பிறந்த நாள்:விஜய்யை வாழ்த்திய நடிகர் நடிகைகள்
நடிகர் விஜய்க்கு நேற்று 46வது பிறந்த நாள் ஆகும்.
2. கச்சா எண்ணெய் விலை 35 டாலர் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையவில்லை ஏன்? கமல்ஹாசன் கேள்வி
கச்சா எண்ணெய் விலை 35 டாலர் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையவில்லை ஏன்? கமல்ஹாசன் கேள்வி.
3. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறப்பு: திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில் - கமல்ஹாசன்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு, திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
4. நடிகை ஸ்ரீபிரியா இயக்கிய குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்
நடிகை ஸ்ரீபிரியா இயக்கிய குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
5. இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது - கமல்ஹாசன்
அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.