தேசிய செய்திகள்

கூட்டணியை உடைக்க நான் விரும்பவில்லை. ஆனால் பாஜக தனது வார்த்தையை காப்பாற்ற வேண்டும் -உத்தவ் தாக்கரே + "||" + Don’t want to break alliance, but BJP should keep its word: Uddhav Thackeray

கூட்டணியை உடைக்க நான் விரும்பவில்லை. ஆனால் பாஜக தனது வார்த்தையை காப்பாற்ற வேண்டும் -உத்தவ் தாக்கரே

கூட்டணியை உடைக்க நான் விரும்பவில்லை. ஆனால் பாஜக தனது வார்த்தையை காப்பாற்ற வேண்டும் -உத்தவ் தாக்கரே
கூட்டணியை உடைக்க நான் விரும்பவில்லை. ஆனால் பாஜக தனது வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.
மும்பை

மராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டசபை  தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

மும்பையில் இன்று காலை மராட்டிய கவர்னர்  கோசியாரியை சந்தித்து பேச பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். எனினும், உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று நடைபெற்ற சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு காத்திருக்கும் வகையில் இந்த சந்திப்பை பிற்பகல்  பாஜக தலைவர்கள் ஒத்திவைத்திருந்தனர். ஆனால் சிவசேனா தரப்பிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை.

இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அது முடிந்த பிறகு, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் உத்தவ் தாக்கரேயின் இல்லத்துக்கு அருகில், அதாவது மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ரங்ஷார்டா நட்சத்திர ஓட்டலில்   எம்.எல்.ஏ-க்களும் தங்க வைக்கப்படவுள்ளதாக நம்ப தகுந்த தகவல் வெளியாகியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவுக்கு சிவசேனா எம்எல்ஏக்கள் அணி தாவுவதை தடுக்கும் வகையில்,  அனைவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த 2 நாள்களுக்கு அங்கு தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

பல தசாப்த கால கூட்டணியை உடைக்க நான் விரும்பவில்லை.  ஆனால் பாஜக தனது வார்த்தையை  காப்பாற்ற வேண்டும். எல்லாம் கடந்த காலத்தில் அமித் ஷாவுடன் முடிவு செய்யப்பட்டது. 

ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ள சிவசேனா எம்.எல்.ஏ அப்துல் சத்தார் கூறும் போது  “மும்பையை விட்டு வெளியேற வேண்டாம் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து எம்.எல்.ஏக்களும் இங்கு ஒன்றாக தங்குகிறோம் . கூட்டத்தில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளனர். எங்களுக்கு   சிவசேனாவை சேர்ந்தவர்  முதல்வர் ஆக வேண்டும் என கூறினார்.

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது;-

முதல்வர் சிவசேனாவிலிருந்து இருக்க வேண்டும் என்ற சிவசேனா நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து சேனா எம்.எல்.ஏக்களும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்துள்ளனர். உத்தவ் தாக்கரேயின் முடிவை ஏற்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். நாங்கள் எங்கள் முதல்வரை விரும்புகிறோம், அது எங்கள் நிலைப்பாடு. இனிமேல், ஒரு சேனா முதல்வர் மாநிலத்தை வழிநடத்துவார் என கூறினார்.