தேசிய செய்திகள்

ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது: சிவசேனா விமர்சனம் + "||" + BJP delaying govt formation, creating President rule situation: Sanjay Raut

ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது: சிவசேனா விமர்சனம்

ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது: சிவசேனா விமர்சனம்
ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
மும்பை,
 
மராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டசபை  தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

மும்பையில் இன்று காலை மராட்டிய கவர்னர்  கோசியாரியை சந்தித்து பேச பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். எனினும், உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று நடைபெற்ற சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு காத்திருக்கும் வகையில் இந்த சந்திப்பை பிற்பகல்  பாஜக தலைவர்கள் ஒத்திவைத்திருந்தனர். ஆனால் சிவசேனா தரப்பிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. சிவசேனா ஆட்சியில் சமபங்கு என்ற தனது கோரிக்கையில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. சிவசேனா எம்.எல்.ஏக்கள் இரண்டு நாட்கள் சொகுசு விடுதியில் தங்குமாறு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,  ஆட்சி அமைக்க தங்களால் முடியாது என்பதை பாஜக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன்பிறகு, சிவசேனா அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும்.  

முதல் மந்திரி எங்கள் கட்சியில் இருந்து மட்டுமே  வர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை அவையில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இன்று கவர்னரை சந்தித்த பாஜக  தலைவர்கள் ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. வெறும் கையோடு ஏன் அவர்கள் திரும்பினர். ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது. பாஜகவிடம் போதிய எண்ணிக்கை இல்லை” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்
புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.
2. கொரோனாவுக்கு எதிரான போர்: விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு
கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் முன்வரிசையில் இருந்து பணியாற்றி வருவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
3. வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலை பாஜக வெளியிட தயங்கியது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்
வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலில் பாஜகவின் நண்பர்கள் இடம் பெற்றிருப்பதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
4. அதிகாலை முதல் நள்ளிரவுவரை கடினமாக உழைக்கும் ஜனாதிபதி நான்தான்; டிரம்ப்
அதிகாலை முதல் நள்ளிரவுவரை கடினமாக உழைக்கும் ஜனாதிபதி நான்தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
5. தமிழ் புத்தாண்டு ஜனாதிபதி-துணை ஜனாதிபதி வாழ்த்து
தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.