தேசிய செய்திகள்

காஷ்மீரில் பனிப்பொழிவு: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 11 விமானங்கள் ரத்து + "||" + 11 flights from Delhi to Srinagar cancelled due to snowfall in Kashmir

காஷ்மீரில் பனிப்பொழிவு: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 11 விமானங்கள் ரத்து

காஷ்மீரில் பனிப்பொழிவு: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 11 விமானங்கள் ரத்து
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

காஷ்மீரில் குளிர்காலம் ஆரம்பமானதையடுத்து பல மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் பிர் பாஞ்சால் மலைகளில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவின் காரணமாக மொகல் சாலை மூடப்பட்டது. மேலும் காஷ்மீரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்ல இருந்த 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவின் காரணமாக  வெவ்வேறு சம்பவங்களில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்டில் பனிப்பொழிவைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களை வெண் பனி சூழ்ந்துள்ளது.
2. காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல் செய்தார்.
3. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
4. காஷ்மீரில் இணைய தள முடக்கம் ஏன்? மத்திய அரசு விளக்கம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
5. காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாடுவதாக தகவல்; பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை
காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.