தேசிய செய்திகள்

குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தல் + "||" + No horse-trading, no poaching: Mohan Bhagwat tells Fadnavis

குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தல்

குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தல்
ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம் என்று தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தியுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் குழப்பமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பகவத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். 

அப்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் விட்டுவிடுங்கள். எதிர்க்கட்சியாக இருக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மையை பெறுவதற்காக குதிரை பேரம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். 

அதேபோல சிவசேனா இல்லாமல் ஆட்சி அமைக்க வேண்டாம் எனவும் மோகன் பகவத் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய பட்னாவிசின் மனு தள்ளுபடி
வேட்பு மனுவில் கிரிமினல் வழக்குகளை மறைத்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய தேவேந்திர பட்னாவிசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2. பா.ஜனதா ஆட்சியில் ஊழல் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி - விசாரணைக்கு பயப்படமாட்டோம்
முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் நடந்தது என காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியதற்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்து உள்ளார்.