தேசிய செய்திகள்

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு 92-வது பிறந்தநாள்: பிரதமர் நேரில் வாழ்த்து + "||" + On LK Advani’s birthday, PM Modi showers praise on veteran leader, says ‘he toiled for decades to give shape, strength to BJP’

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு 92-வது பிறந்தநாள்: பிரதமர் நேரில் வாழ்த்து

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு 92-வது பிறந்தநாள்: பிரதமர் நேரில் வாழ்த்து
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி 92-வது பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு நேற்று 92-வது பிறந்தநாள். அவர் 1927-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தவர்.

அத்வானி நேற்று டெல்லியில் உள்ள இல்லத்தில் தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.


அத்வானி இல்லத்துக்கு பிரதமர் மோடி நேரில் சென்றார். பூங்கொத்து கொடுத்து அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் அத்வானிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானி இல்லத்துக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், அத்வானிக்கு புகழாரம் சூட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அறிஞர், அரசியல் மேதை, பெரிதும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர் என அத்வானி எப்போதும் மதிக்கப்படுவார். இந்திய அரசியலில் ஆளுமைமிக்க கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது என்றால், அதற்கு அத்வானி போன்ற தலைவர்களும், அவர் வளர்த்த செயல் வீரர்களும்தான் காரணம்.

அவர் பல ஆண்டுகளாக பாடுபட்டு பா.ஜனதாவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தார். அவர் எப்போதும் சித்தாந்தத்தில் சமரசம் செய்து கொண்டது இல்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்தபோது, அவர் முன்னணியில் நின்றார். மந்திரியாக இருந்தபோது, அவரது நிர்வாகத்திறன் பரவலாக பாராட்டப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை
டெல்லியில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
3. ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் ஆகியோருடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
4. மராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பாஜக
மராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது என பாரதீய ஜனதா கூறி உள்ளது.
5. 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி, பிரேசில் புறப்பட்டு சென்றார் - ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பு
2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.