மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது-ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி + "||" + There is a vacuum for personality leadership in Tamil Nadu: Rajinikanth

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது-ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது-ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல தனக்கு பாஜக சாயம் பூச முயற்சி நடப்பதாக  கூறினார். நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்டி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறிப்போனது. 

இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- நான் எப்போதும் வெளிப்படையாக பேசி  வருகிறேன். நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது.

 திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன.  சிலர் பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள். அரசியலில் இது சகஜம். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூட கட்சி தொடங்கி முதல்வராகும் வரை தொடர்ந்து படங்களில் நடித்தார்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆட்சி அமைவதில் இழுபறி: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியா? - பா.ஜனதா மந்திரி தகவலால் பரபரப்பு
மராட்டியத்தில் வருகிற 7-ந்தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்காவிட்டால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
2. மராட்டிய தேர்தல்: பாஜக மந்திரி பங்கஜா முண்டே தோல்வி
மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
3. ”நான் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன்” -ஆதித்யா தாக்ரே
”நான் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன்” என்று சிவசேனாவின் முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகாவில் தற்போதைய சூழலில் யாராலும் நிலையான ஆட்சி தர முடியாது : குமாரசாமி
தற்போதைய சூழலில் யாராலும் நிலையான ஆட்சி தர முடியாது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
5. கோவா: காங்கிரசிலிருந்து பாஜக-வுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி
கோவாவில் காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.