தேசிய செய்திகள்

மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ் + "||" + Maharashtra Chief Minister Devendra Fadnavis and other state ministers meet Governor Bhagat Singh Koshyari at Raj Bhawan

மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டிய முதல்-மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.
மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.

145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது.

அதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 15 நாட்கள் முடிந்த போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், மராட்டிய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் மராட்டிய  முதல்-மந்திரி  தேவேந்திர பட்னாவிஸ்  ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை  நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

தொடர்ந்து ஆளுநரை சந்தித்த பின் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

5 ஆண்டுகள் மராட்டிய மக்களுக்கு சேவை செய்ததில் மகிழ்ச்சி. ராஜினாமாவை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய பட்னாவிசின் மனு தள்ளுபடி
வேட்பு மனுவில் கிரிமினல் வழக்குகளை மறைத்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய தேவேந்திர பட்னாவிசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2. பா.ஜனதா ஆட்சியில் ஊழல் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி - விசாரணைக்கு பயப்படமாட்டோம்
முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் நடந்தது என காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியதற்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்து உள்ளார்.
3. பா.ஜனதா கூட்டணியில் நவநிர்மாண் சேனா? தேவேந்திர பட்னாவிஸ் பதில்
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவும் சமீபத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.
4. மாணவர்கள் போராட்டத்தில் ‘சுதந்திர காஷ்மீர்' பதாகை: பட்னாவிஸ்- ஜெயந்த் பாட்டீல் இடையே டுவிட்டரில் மோதல்
‘கேட்வே ஆப் இந்தியா’வில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் சுதந்திர காஷ்மீர் வாசகம் அடங்கிய பதாகை இடம் பெற்றிருந்தது தொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், மந்திரி ஜெயந்த் பாட்டீலும் டுவிட்டரில் மோதிக்கொண்டனர்.
5. சிஏஏ குறித்து முஸ்லிம்கள் இடையே தவறான புரிதலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி : பாஜக குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முஸ்லிம்கள் இடையே தவறான புரிதலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.