தேசிய செய்திகள்

என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல்காந்தி + "||" + A big thank you to all my brothers & sisters in the SPG who worked tirelessly to protect me & my family over the years Rahul Gandhi ‏

என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல்காந்தி

என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல்காந்தி
என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

28 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் படை பாதுகாப்பை (எஸ்பிஜி)  மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதற்குப் பதிலாக சிஆர்பிஎப் சார்பில் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி டுவீட் செய்துள்ளார். 

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

உங்கள் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு மற்றும் பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி. என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. இது ஒரு பாக்கியமாக கருதுகிறேன். உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடிக்கடி வெளிநாடு பயணம்: ராகுல்காந்தி ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா? பாரதீய ஜனதா கேள்வி
அடிக்கடி வெளிநாடு பயணம் செல்லும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியினருக்கும் தெரியாத அளவுக்கு ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா? என பாரதீய ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.
2. எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு: ராகுல் காந்தி கிண்டல்
எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு என்று தெரிவித்த பா.ஜனதா வேட்பாளரை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
3. மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி
பிரசாரத்திற்கு சென்ற ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, ராகுல்காந்தி கிரிக்கெட் விளையாடினார்.
4. வயநாட்டில் சுற்றுப்பயணம்: ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர்
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியின் கன்னத்தில், இளைஞர் ஒருவர் அன்பு மிகுதியில் முத்தமிட்டார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
5. காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது - டெல்லி திரும்பிய ராகுல் காந்தி பேட்டி
காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று டெல்லி திரும்பிய ராகுல் காந்தி கூறினார்.