தேசிய செய்திகள்

விருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு + "||" + 40,000 BSNL employees availed VRS scheme

விருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு

விருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு
விருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு அளித்துள்ளனர்.
புதுடெல்லி,

நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.69 ஆயிரம் கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், விருப்ப ஓய்வு திட்டமும் அடங்கும்.


கடந்த 5-ந் தேதி, பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அமலுக்கு வந்தது. 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சம் ஊழியர்கள் இதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

இந்நிலையில், நேற்று நிலவரப்படி, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி விட்ட தாக பி.எஸ்.என்.எல். தலைவர் பி.கே.புர்வார் தெரிவித்தார். இவர்களில், 26 ஆயிரம்பேர், குரூப் சி ஊழியர்கள் என்றும் அவர் கூறினார். மொத்தம் 80 ஆயிரம் ஊழியர்கள் வரை விண்ணப்பிப்பார்கள் என்றும், இதன்மூலம் ரூ.7 ஆயிரம் கோடி சம்பள பணம் மிச்சமாகும் என்றும் பி.எஸ்.என்.எல். எதிர்பார்க்கிறது.