தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு - மத வழிபாட்டு கூட்டங்களுக்கு விதிவிலக்கு + "||" + 144 ban across Goa in Ayodhya verdict - Exceptions to religious worship meetings

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு - மத வழிபாட்டு கூட்டங்களுக்கு விதிவிலக்கு

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு - மத வழிபாட்டு கூட்டங்களுக்கு விதிவிலக்கு
அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மத வழிபாட்டு கூட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பனாஜி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று(சனிக்கிழமை) வெளியிடுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.


இதைத்தொடர்ந்து கோவா மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாக கூட தடை செய்யப்பட்டு உள்ளது.

எனினும் மத வழிபாடு தொடர்பான கூட்டங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதாக முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் நேற்று தெரிவித்தார்.