தேசிய செய்திகள்

ஜனவரி மாதம் முதல் இணையதள பண பரிமாற்றத்துக்கு கட்டணம் கிடையாது + "||" + From January, banks cannot charge you for online NEFT transactions

ஜனவரி மாதம் முதல் இணையதள பண பரிமாற்றத்துக்கு கட்டணம் கிடையாது

ஜனவரி மாதம் முதல் இணையதள பண பரிமாற்றத்துக்கு கட்டணம் கிடையாது
ஜனவரி மாதம் முதல் இணையதள பண பரிமாற்றத்துக்கு கட்டணம் கிடையாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் மத்திய அரசு இணையதள பணபரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறவர்கள், தங்கள் பணத்தை எளிதாகவும், பாதுகாப்பாகவும் இணையதள வழியாக ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்து கொள்ள ‘நெப்ட்’ என்னும் தேசிய மின்னணு நிதி பரிமாற்ற முறை உதவுகிறது.


ஆனால் இதற்கு ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ள இந்த தருணத்தில், ‘நெப்ட்’ பண பரிமாற்ற சேவையை ஊக்குவிக்கிற வகையில், அதற்கான சேவை கட்டணத்தை விலக்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளது.

இது வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.