தேசிய செய்திகள்

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Opposition to Megadadu Dam building: Tamil Nadu government postpones hearing on January 23 - Supreme Court order

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து, அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது.


அந்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. மேலும் இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படியும் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் மேகதாது பகுதியில் புதிய அணைக்கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடக அரசு தரப்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்தநிலையில், நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரியதை ஏற்றுக் கொண்டு, விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜல்லிக்கட்டின் போது காளைகள்‘மரணம்’ விலங்கு நல அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம்
ஜல்லிக்கட்டு ஆய்வு அறிக்கையின் மீதான பதில்களை விரைவாக வழங்குமாறு தமிழக அரசை இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டு கொண்டுள்ளது
2. ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு- தமிழக அரசு
ஜி எஸ் டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜுன் 30 உடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. சுருக்கு வலையில் மீன்பிடிக்க எதிர்ப்பு; 2 மீனவர் கிராமத்தினர் மோதல் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு
சுருக்கு வலையில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் மோதிக்கொண்டதில் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க பொதுமக்கள் எதிர்ப்பு
சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
5. கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது
கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.