மாநில செய்திகள்

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை; எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + There is no vacuum in Tamil Nadu politics; Edapadi Palanisamy Talk

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை; எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை; எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று மாலை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இன்று பல பேர் அரசியலுக்கு புறப்பட்டு விட்டார்கள். சினிமா துறையில் இருந்தும் வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவை பார்த்தும், சிலர் இன்னும் ஆட்சி அமைப்போம் என்று கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள். இது அரசியல். சினிமா அல்ல. அரசியலை தொழில் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ திடீரென பிரவேசித்து பதவிக்கு வந்து விட முடியாது. அப்படி ஆட்சி பொறுப்பை கொடுக்கிற மக்களும் தமிழ்நாட்டு மக்கள் அல்ல. யார் வேண்டுமானால் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க.தான்.

ஏனென்றால் எம்.ஜி.ஆர். முதலில் எம்.எல்.ஏ.வாக இருந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார். அவர் நேரடியாக முதல்-அமைச்சர் பதவிக்கு வரவில்லை. அதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தார். வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.. தனது திரைப்படம் மூலமும் நாட்டு மக்களின் நிலையை எடுத்துக்கூறினார். ஆனால் சில விஷமிகள், அவருடைய உழைப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டனர். எனவே மக்களுக்கு நன்மை செய்ய, அண்ணாவின் கனவை நினைவாக்க எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கினார். ஆட்சி அமைத்தார். எம்.ஜி.ஆரை போன்று யாரும் திரையுலகில் இருந்து வரமுடியாது. அவரை போன்று நாட்டு மக்களுக்காக உழைத்தவர்கள் வேறு யாரும் கிடையாது.

அரசியலுக்கு எத்தனையோ பேர் வந்தாலும் காணாமல் போய்விடுகிறார்கள்.

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் முகாமிட்டு பிரசாரம் செய்தபோது, இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் முன்னோடி தேர்தல் என்று கூறினார். அதற்கு தகுந்தபடி வாக்காளர்கள், அவருக்கு சம்மட்டி அடி கொடுத்தார்கள்.

இந்த உத்வேகத்தோடு உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது ஒன்று. அ.தி.மு.க.வில் வெற்றிடம் உள்ளது என்று சொன்னவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இது. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை 2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட நடூர் கிராமத்தில், வீடுகள் இடிந்து மிகப்பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
2. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு ‘தில்’ இருக்கிறது; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு தில் இருக்கிறது என்றும், தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
3. கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிக அளவில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி
தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
5. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க ரூ.2,363 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு உத்தரவு
அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்காக ரூ.2,363 கோடி தொகையை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.