உலக செய்திகள்

ஈராக்கில் கடந்த 3ந்தேதியில் இருந்து 5 நாட்களுக்குள் 23 போராட்டக்காரர்கள் பலி + "||" + Iraqi clashes: At least 23 demonstrators killed from November 3 to 7

ஈராக்கில் கடந்த 3ந்தேதியில் இருந்து 5 நாட்களுக்குள் 23 போராட்டக்காரர்கள் பலி

ஈராக்கில் கடந்த 3ந்தேதியில் இருந்து 5 நாட்களுக்குள் 23 போராட்டக்காரர்கள் பலி
ஈராக் நாட்டில் கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து 5 நாட்களுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பாக்தாத்,

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.  கடந்த மாதம் 1ந்தேதி தொடங்கி நடந்து வரும் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.

ஈராக்கின் மனித உரிமைகளுக்கான தனி தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அரசின் மந்திரி சபை மறுசீரமைப்பு, தேர்தல் சட்டங்களில் திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் என கடந்த அக்டோபர் 1ந்தேதியில் இருந்து நடந்து வரும் நாடு தழுவிய போராட்டத்தில், கடந்த நவம்பர் 7ந்தேதி வரை வன்முறைக்கு 269 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இது தவிர்த்து ஈராக் பாதுகாப்பு படையினர் உள்பட 8 ஆயிரம் பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து 7ந்தேதி வரை 23 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று போராட்டக்காரர்கள் மற்றும் ஈராக் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 1,077 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  கைது செய்யப்பட்ட 201 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று தெரிவித்து உள்ளது.

ஈராக் அரசானது மந்திரிசபை மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் சட்டங்களில் திருத்தம் ஆகியவை கொண்டு வரப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
2. காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
3. போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
போராட்டத்தின் போது சேதம் அடைந்த சொத்துகளுக்கு நஷ்டஈடு வசூலிப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் பேனர் வைத்த உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
4. ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. போராட்டக்காரர்களை குறிவைத்து டெல்லியில் தொடரும் துப்பாக்கி சூடு: பதற்றம் அதிகரிப்பு
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர் களை குறிவைத்து துப்பாக்கியால் சூடும் சம்பவம் தொடருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.