மாநில செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு + "||" + School holidays due to rain in Dharmapuri district

தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி,

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.  இந்த புயல் தீவிர புயலாகவும் பின்னர் அதிதீவிர புயலாகவும் வலுப்பெற்று உள்ளது.

இதனிடையே, புல்புல் புயலால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் இன்று தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.  இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தொடர் மழையின்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி முடிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இதன்படி, தர்மபுரியில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த உத்தரவை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. அயோத்தி வழக்கு தீர்ப்பு; கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக கிருஷ்ணகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆட்சியர் நாளை விடுமுறை அறிவித்து உள்ளார்.
4. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.