தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது - பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi tweets on #AyodhyaJudgment

அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது - பிரதமர் மோடி

அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது - பிரதமர் மோடி
அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், மற்றும் போப்டே ஆகியோர் கொண்ட  5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பினை அளித்தது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்த  நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த 3 தரப்புக்கும் நிலம் சொந்தமல்ல என்று குறிப்பிட்டனர். 

இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு  மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மொத்தம் ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி கருத்து

அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில்  பதிவிட்டுள்ளதாவது;  “அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது. நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை அயோத்தி தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ தேச பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதில் மாநிலங்களுக்கும் பங்கு உள்ளது - பிரதமர் மோடி பேச்சு
2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை இந்தியா எட்டச் செய்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் பங்கு உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
2. பிரதமர் மோடியுடன் லடாக் துணை நிலை ஆளுநர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை லடாக் துணை நிலை ஆளுநர் ஆர்.கே. மாதுர் சந்தித்து பேசினார்.
3. பிரதமர் மோடியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
4. இந்தியா பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது நமக்கு பெருமையே - பிரதமர் மோடி
இந்தியா பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது நமக்கு பெருமையே என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. ஆஸ்திரேலியா, வியட்நாம் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகிய நாட்டைச்சேர்ந்த பிரதமர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.