மாநில செய்திகள்

அயோத்தி தீர்ப்பு : "மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்" -திமுக தலைவர் மு.கஸ்டாலின் + "||" + Ayodhya verdict"Go ahead with religious dignity" MK Stalin

அயோத்தி தீர்ப்பு : "மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்

அயோத்தி தீர்ப்பு : "மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்
நாட்டின் பன்முகத்தன்மைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புவதாக அயோத்தி தீர்ப்பு குறித்து மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து  கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின்,  “நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வை கண்டுள்ளதாக  கூறியுள்ளார்.  மேலும், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பை வழங்கியுள்ள பின்னர், அதை ஏற்றுக்கொண்டு அனைத்து தரப்பினரும் சமமான மத நல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாட்டின் பன்முகத்தன்மைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாமா? - ராமஜென்ம பூமி அறக்கட்டளை பரிசீலனை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்துவது குறித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளை பரிசீலித்து வருகிறது.
3. அயோத்தியில் ராமர் சிலை தற்காலிக கோவிலுக்கு மாற்றப்படுகிறது
அயோத்தியில் உள்ள ராமர் சிலை தற்காலிக கோவிலுக்கு மாற்றப்பட இருப்பதாக அறக்கட்டளை செயலாளர் கூறியுள்ளார்.
4. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பிரதமர் மோடி அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. அயோத்தியில் தொடர் குண்டுவெடிப்பு: பதற்றம் நீடிப்பு
அயோத்தியில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.