தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ராகுல் காந்தி + "||" + Honoring this decision of the court Says Rahul Gandhi

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ராகுல் காந்தி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ராகுல் காந்தி
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது;- அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை  அனைவரும் மதிப்பதோடு, பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும். அனைவரும் சகோதரத்துவம், நம்பிக்கை, அன்பை பேணி காக்க வேண்டிய தருணம் இதுவாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு- நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்
சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
2. அயோத்தி தீர்ப்பு குறித்து அதிருப்தி; ஓவைசி மீது வழக்குப்பதிவு
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து விமர்சித்த ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது -ராகுல் காந்தி
பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.
4. ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம்
ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன் என காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
5. ஆரே காலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணியை தொடரலாம்- உச்ச நீதிமன்றம்
ஆரே காலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணியை தொடரலாம் எனவும் அடுத்த விசாரணை நடைபெறும் வரை மரங்களை வெட்டக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.