தேசிய செய்திகள்

அயோத்திக்கு வரும் 24 ஆம் தேதி செல்ல உள்ளேன் : சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே + "||" + Sena chief Uddhav Thackeray says he may visit Ayodhya on November 24.

அயோத்திக்கு வரும் 24 ஆம் தேதி செல்ல உள்ளேன் : சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே

அயோத்திக்கு வரும் 24 ஆம் தேதி செல்ல உள்ளேன் : சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே
அயோத்திக்கு வரும் 24 ஆம் தேதி செல்ல இருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே,  அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.

இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டிய நாள் இன்று. நான் வரும் 24-ம் தேதி அயோத்திக்குச் செல்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் சிவசேனா எப்போதுமே தீவிரம் காட்டியிருக்கிறது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும். அவர்தான் ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை நடத்தினார். அவரிடம் ஆசியும் பெற வேண்டும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜெய் ஸ்ரீராம் என்பது அரசியல் வார்த்தை அல்ல: சிவசேனா
இந்த நாட்டில் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறுவதை யாரும் வேதனையாக நினைக்கக்கூடாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
2. ராகுல் காந்தியை கண்டு பா.ஜனதா பயப்படுகிறது; சிவசேனா சொல்கிறது
ராகுல் காந்தியை கண்டு பயப்படுவதாலேயே அவரது குடும்பத்தை பற்றி இழிவுப்படுத்தும் பிரசாரங்களை மத்திய பா.ஜனதா ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.
3. அயோத்தியில் ராமர்கோவில் கட்டுமான பணி 15-ந்தேதி தொடக்கம்
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நாட்டினார்.
4. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும்; அறக்கட்டளை தகவல்
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ 1,100 கோடி செலவாகும் எனவும் 3½ ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கோவிலை கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
5. மத்திய- மாநில அரசுகள் உறவில் சீர்கேட்டால் சோவியத் யூனியன் போல இந்திய மாநிலங்கள் சிதறலாம்; சிவசேனா சொல்கிறது
மத்திய- மாநில அரசுகளின் உறவின் சீர்கேடு காரணமாக சோவியத் யூனியன் போல் மாநிலங்கள் சிதறுண்டுபோகலாம் என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.