தேசிய செய்திகள்

"28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களில் இருந்தோம்" எஸ்.பி.ஜி.தலைவருக்கு சோனியாகாந்தி கடிதம் + "||" + Day after Govt Removes SPG Cover, Sonia Gandhi Thanks Elite Security Force for 'Outstanding' Service

"28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களில் இருந்தோம்" எஸ்.பி.ஜி.தலைவருக்கு சோனியாகாந்தி கடிதம்

"28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களில் இருந்தோம்"  எஸ்.பி.ஜி.தலைவருக்கு சோனியாகாந்தி கடிதம்
"28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களில் இருந்தோம்" என்று எஸ்.பி.ஜி. தலைவருக்கு நன்றி தெரிவித்து சோனியாகாந்தி கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை 'வாபஸ்' பெறுவதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்நிலையில்,  எஸ்.பி.ஜி. பாதுகாப்புப் படையினர் மிகச் சிறப்பான பாதுகாப்பை வழங்கியதாக அந்த அமைப்பின் தலைவருக்கு, காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி நன்றி தெரிவித்துள்ளார். 

எஸ்.பி. ஜி. தலைவர் அருண் சின்காவுக்கு எழுதிய கடிதத்தில், தங்களின் குடும்பத்தினர் சார்பாக, இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சோனியாகாந்தி கூறியுள்ளார். 

அர்ப்பணிப்பு, விவேகம், தனிப்பட்ட கவனம் போன்ற தீவிர பணியில் எஸ்.பி.ஜி. படையினர் இருந்ததாகவும், கடந்த 28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களின் நடுவே இருந்ததாகவும் சோனியாகாந்தி கூறியுள்ளார்.