உலக செய்திகள்

கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு + "||" + Kartarpur corridor Opening: Welcome to America

கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு

கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு
கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
வாஷிங்டன்,

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது.


இதற்காக சீக்கிய பக்தர்கள், சென்று வருவதற்கு வசதியாக இரு நாடுகளுக்கு இடையே, 3 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை யாத்ரீகர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சீக்கியர்கள், புனித யாத்திரை செல்ல அமைக்கப்பட்ட பாதை இன்று முறைப்படி திறக்கப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கர்தார்பூர் வழித்தடம் எனும் பெயரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய எல்லை வழி திறக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும், சிறந்த மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படி இது என்றும், குருநானக்கின் 550வது பிறந்த தினத்தின்போது எல்லை தாண்டி கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரியா எல்லை: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தம்
கொரியா எல்லையில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
2. விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் கலந்து கொண்டார்
விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
3. எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா
எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
4. சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
5. நிறைவேறுகிறது, கர்தார்பூர் கனவு
கண்ணுக்கு எட்டும் தொலைவில்தான் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா! - ஆனால் சீக்கியர்கள் நினைத்த உடனேயே அங்கு நேரில் சென்று வழிபட்டு விட முடியாது. அங்கே சென்று வழிபட வேண்டும் என்றால் அதற்கு பாஸ்போர்ட் வேண்டும், விசா வேண்டும் என்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஆனது சீக்கிய மக்களுக்கு. காரணம், அந்த குருத்வாராவின் அமைவிடம் பாகிஸ்தான்.