தேசிய செய்திகள்

உத்தரபிரதேச மசூதியில் வெள்ளைக்கொடி + "||" + White Flag at Uttar Pradesh Mosque

உத்தரபிரதேச மசூதியில் வெள்ளைக்கொடி

உத்தரபிரதேச மசூதியில் வெள்ளைக்கொடி
உத்தரபிரதேச மசூதியில் வெள்ளைக்கொடி ஏற்றப்பட்டது.
லக்னோ,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியானதையொட்டி உத்தரபிரதேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

உத்தரபிரதேச மாநிலம் ஈட்டவா சஜ்ஜனாஷின் தர்காவில் நேற்று வெள்ளைக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. அந்த மசூதியை சேர்ந்த அகமது நைமி வெளியிட்ட செய்தியில் ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையொட்டி அமைதியை நிலை நாட்டவும் சமாதானத்தை தெரிவிக்கும் வகையிலும் நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்ற செய்தியை வெளிஉலகுக்கு அறிவிக்கும் வகையில் மசூதியில் உயரமான கம்பத்தில் வெள்ளைக்கொடியை ஏற்றி உள்ளோம்’ என்றார்.