தேசிய செய்திகள்

‘ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது’ - மேற்கு வங்காள கவர்னர் சொல்கிறார் + "||" + Rajinikanth has popular influence - says West Bengal Governor

‘ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது’ - மேற்கு வங்காள கவர்னர் சொல்கிறார்

‘ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது’ - மேற்கு வங்காள கவர்னர் சொல்கிறார்
லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்றும், ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்றும் மேற்கு வங்காள கவர்னர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார், கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை தொடர்ந்து ‘தினத்தந்தி’ நிருபர் அவரிடம், ‘நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம்’ குறித்து கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த ஜெகதீப் தன்கார், “நடிகர் ரஜினிகாந்தின் லட்சக்கணக்கான தீவிர ரசிகர்களின் நானும் ஒருவன். அவரது ஸ்டைல், நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜினிகாந்தை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அவரது சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.

சமீபத்தில் வெளியான அவரது படங்கள் உள்பட அனைத்து படங்களையும் நான் பார்த்து விட்டேன். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். அவரது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் கணிக்க முடியாது. ஆனால் மக்கள் செல்வாக்கு அவருக்கு இருக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான்- ரஜினி குறித்து கமல்ஹாசன் பேச்சு
இயக்குனர் பாலச்சந்தரின் சிலையை திறந்து வைத்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
2. கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார் -நடிகர் ரஜினிகாந்த்
அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை கமல்ஹாசன் மறக்கமாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
3. 4 மொழிகளில் ரஜினியின் ‘தர்பார்’
‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
4. ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது: கமல்ஹாசன் வாழ்த்து
சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி: நடிகர் ரஜினிகாந்த் டுவிட்
விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.