தேசிய செய்திகள்

உண்மையும், நீதியும் அழுத்தமாக கூறப்பட்டுள்ளது: அயோத்தி தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் வரவேற்பு + "||" + Truth and justice are stressed: RSS for Ayodhya verdict Hindu organizations including Welcome

உண்மையும், நீதியும் அழுத்தமாக கூறப்பட்டுள்ளது: அயோத்தி தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் வரவேற்பு

உண்மையும், நீதியும் அழுத்தமாக கூறப்பட்டுள்ளது: அயோத்தி தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் வரவேற்பு
உண்மையும், நீதியும் அழுத்தமாக கூறப்பட்டுள்ளது என்று அயோத்தி தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். பல்வேறு இந்து அமைப்புகள் தீர்ப்பை வரவேற்றுள்ளன.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் அயோத்தி தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பல ஆண்டுகளாக நீடித்துவந்த இந்த வழக்கு சரியான முடிவுக்கு வந்துள்ளது. இது வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ தெரியவில்லை. சமுதாயத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரிக்க ஒவ்வொருவரும் எடுத்த முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.


இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், அது நடந்துவிட்டது. அனைத்து தரப்பும் மதிப்பிடப்பட்டது. உண்மை மற்றும் நீதி அழுத்தமாக கூறப்பட்டுள்ளது. அயோத்திக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் வரலாற்று பின்னணி உள்ளது. இல்லையென்றால் ஒரு அமைப்பு என்ற வகையில் நாங்கள் போராட்டங்களில் பங்கேற்பதில்லை. நாங்கள் மீண்டும் எங்களது மனித பண்புகளை வளர்க்கும் செயல்பாடுகளுக்கு திரும்புகிறோம். இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் நிருபர்களிடம் கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவான உறுதியான முடிவு. மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை நிறைவேற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ராமர் கோவிலுக்கான 60 சதவீத தூண்களும், உத்திரங்களும் தயாராக உள்ளன. இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு மகிழ்ச்சியான நாள்” என்றார்.

ராம்லல்லா அமைப்பின் வாதியான திரிலோகிநாத் பாண்டே கூறும்போது, “சுதந்திரம் கிடைத்தது நாட்டுக்கு முதல் வெற்றி, அதன்பின்னர் இன்று அயோத்தி வழக்கின் தீர்ப்பு 2-வது பெரிய வெற்றி. விஸ்வ இந்து பரிஷத் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் தவிர வேறு எந்த இடத்தில் மசூதி கட்டவும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை” என்றார்.

ராம்லல்லா தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “இது வரலாற்று முடிவு. அனைவரும் இதனை மதிக்க வேண்டும். இப்போது யாரும் ராமர் கோவில் கட்டுவதை தடுத்துநிறுத்த முடியாது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு செய்துள்ளது.