தேசிய செய்திகள்

அயோத்தி வழக்குதான் சுப்ரீம் கோர்ட்டின் 2-வது நீண்ட வழக்கு விசாரணை + "||" + The Ayodhya case is the 2nd longest trial of the Supreme Court

அயோத்தி வழக்குதான் சுப்ரீம் கோர்ட்டின் 2-வது நீண்ட வழக்கு விசாரணை

அயோத்தி வழக்குதான் சுப்ரீம் கோர்ட்டின் 2-வது நீண்ட வழக்கு விசாரணை
அயோத்தி வழக்குதான் சுப்ரீம் கோர்ட்டின் 2-வது நீண்ட வழக்கு விசாரணையாக கருதப்படுகிறது.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் 1973-ம் ஆண்டு கேசவானந்த் பார்தி வழக்கில் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு குறித்து தொடர்ந்து 63 நாட்கள் விசாரணை நடைபெற்றது. இதுவே இன்றுவரை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற மிக நீண்ட வழக்கு விசாரணையாக உள்ளது.


இதற்கு அடுத்தபடியாக அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தொடங்கிய விசாரணை அக்டோபர் 16-ந் தேதி நிறைவுபெற்றது. முதலில் அக்டோபர் 18-ல் விசாரணை முடியும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் 16-ந் தேதி நீதிபதிகள், ‘போதும், போதும்’ என்று கூறி விசாரணையை முடித்து வைத்தனர். நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையே சுப்ரீம் கோர்ட்டின் 2-வது நீண்ட வழக்கு விசாரணையாக உள்ளது.

3-வது இடத்தில் ஆதார் திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கு விசாரணை உள்ளது. இந்த விசாரணை 30 நாட்கள் நடைபெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கு தீர்ப்பும்; அரசியல் தலைவர்களின் வரவேற்பும்
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பினை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
2. அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு
அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அறிவித்துள்ளது.
3. அயோத்தி வழக்கு: 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம்; ரஞ்சன் கோகாய்
அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார்.
4. அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை...
உத்தரபிரதேசத்தில் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதையை பற்றி அறிந்து கொள்வோம்.
5. ‘அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்’ - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருக்கள் வலியுறுத்தல்
அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருக்கள் வலியுறுத்தி உள்ளனர்.