தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதன் முதலாக சனிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு + "||" + The verdict on Saturday was the first in Supreme Court history

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதன் முதலாக சனிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதன் முதலாக சனிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு
சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதன் முதலாக அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் அயோத்தி வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி முதல் விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் நடைபெற்று வந்தது. 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கிறார். எனவே அதற்கு முன்னதாக தீர்ப்பை வழங்கவேண்டும் என்ற வகையில், அவரது தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பை கூறியது.


சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது.

“சில ஆபூர்வமான சூழ்நிலைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், இரவிலும் கூட வழக்கு விசாரணைகள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால் எனக்கு தெரிந்த வகையில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது இல்லை. அநேகமாக இப்போதுதான் முதன் முதலாக சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக கருதுகிறேன்” என்று தலைமை நீதிபதியின் முதன்மை தனிச்செயலாளர் எச்.கே.ஜூனேஜா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழியனுப்பு விழா
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வக்கீல் சங்கம் சார்பில் வழியனுப்பு விழா நேற்று நடைபெற்றது.
2. சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி மசூதிக்கான நிலத்தை ஏற்கக்கூடாது - சன்னி வக்பு வாரியத்துக்கு முஸ்லிம் அமைப்பு வேண்டுகோள்
சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி மசூதிக்கான நிலத்தை ஏற்கக்கூடாது என சன்னி வக்பு வாரியத்துக்கு முஸ்லிம் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
3. எதிர்காலத்தில் ராகுல் காந்தி மிகவும் கவனமாக பேச வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
4. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ‘அயோத்திக்கு இனிமேல் பொற்காலமாக இருக்கும்’ - உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள உள்ளூர் மக்கள், அயோத்திக்கு இனிமேல் பொற்காலமாக இருக்கும் என கூறியுள்ளனர்.
5. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் அயோத்தி உள்பட நாடு முழுவதும் முழு அமைதி
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்னர் அயோத்தி உள்பட நாடு முழுவதும் முழு அமைதி நிலவியது.