மாநில செய்திகள்

அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் + "||" + Final verdict in Ayodhya case: All parties should work for peace - Edappadi Palanisamy

அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை ஏற்று நாட்டின் அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி, சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை தமிழக அரசு பேணிக் காத்து வருகிறது.

சாதி, மத பூசல்கள் இன்றி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. அயோத்தி வழக்கு பல்வேறு நிலைகளைக் கடந்து, தற்போது உச்ச நீதிமன்றம் தன்னுடைய இறுதித்தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து, எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்து, இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன - அமைச்சர் செல்லூர் ராஜு
எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் என்றும் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
2. வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட நடூர் கிராமத்தில், வீடுகள் இடிந்து மிகப்பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு ‘தில்’ இருக்கிறது; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு தில் இருக்கிறது என்றும், தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிக அளவில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5. தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி
தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.