உலக செய்திகள்

மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர் + "||" + Morocco's king pardons 300 prisoners

மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர்

மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர்
முகமது நபி பிறந்த நாளை முன்னிட்டு 300 கைதிகளுக்கு மொராக்கோ நாட்டு அரசர் மன்னிப்பு வழங்கினார்.
ரபத்,

மொராக்கோ நாட்டில் அரசர் 6ம் முகமது ஆட்சி செய்து வருகிறார்.  இஸ்லாம் மத தூதரான முகமது நபியின் பிறந்த நாள் அல்-மாவ்லித் அல்-நபாவி அல்லது அல்-மாவ்லித் என்ற பெயரில் அந்நாட்டில் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு 300 கைதிகளுக்கு அரசர் முகமது மன்னிப்பு வழங்கி உள்ளார்.  அவர்களில் சிலர் சிறையிலும் மற்றும் சிலர் ஜாமீனிலும் உள்ளனர்.