உலக செய்திகள்

அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது + "||" + Deputy CM Panneer Selvam awarded 'Gold Tamil Magan' Award

அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது

அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது
அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.
சிகாகோ,

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சிகாகோ சென்றார். அங்குள்ள ஓக் புரூக் டெரேசில் நடைபெற்ற 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார்.


விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ராஜா கிருஷ்ண மூர்த்தி, சேம்பர்க் மேயர் டாம் டெய்லி, ஓக் புரூக் மேயர் கோபால் ஆல் மலானி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அரசு செயலாளர் ச.கிருஷ்ணன், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் உள்பட தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கடும் குளிரிலும் வேட்டி - சட்டை

அமெரிக்காவில் இப்போது கடும் குளிர்காலம் நிலவி வருகிறது. சிகாகோ நகரில் குளிர் மைனஸ் 1 டிகிரி அளவுக்கு உள்ளது. ஆனாலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ப.ரவீந்திரநாத் குமாரும் வேட்டி - சட்டை அணிந்தே நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். சட்டைக்கு மேலே ஓவர் கோட் மட்டும் அணிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனிலவுக்கு சிறந்த இடம்; கேரளாவுக்கு விருது
தேனிலவுக்கு சிறந்த இடமாக தேர்வுசெய்யப்பட்ட கேரளாவுக்கு விருது வழங்கப்பட்டது.
2. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது கலெக்டர் பாராட்டு.
3. நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறந்த சேவைக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு தேசிய விருது ஜனாதிபதி வழங்கினார்
நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறந்த சேவைக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
4. உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மெஸ்சி வென்றார்
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி வென்றார்.
5. தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது
தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளதால் கல்வி அதிகாரி வாழ்த்து கூறினார்.