மாநில செய்திகள்

ரஜினி சொல்வதைப்போல் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் + "||" + As Rajini says here is a vacuum in Tamil Nadu PonRadhakrishnan

ரஜினி சொல்வதைப்போல் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினி சொல்வதைப்போல் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
ரஜினி சொல்வதைப்போல் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் போயஸ்கார்டனில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார். இதனை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மறுத்து வருகின்றன.

இந்தநிலையில்,  பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தி.நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கிறது என ரஜினி மட்டுமில்லை. நானும் சொல்கிறேன். மக்கள் செல்வாக்கு பெற்ற இரண்டு தலைவர்கள் (கருணாநிதி, ஜெயலலிதா) இப்போது இல்லை, அதனால்தான் வெற்றிடம் உள்ளது என கூறுகிறோம். 

முரசொலி இடம் யாருக்கு சொந்தம் என்று அதிகாரிகளைக் கொண்டு முதலமைச்சர் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும்.  பஞ்சமி நிலம் வைத்திருப்பதை போன்ற பெரும் பாவச் செயல் வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.