தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கில் வாதங்களில் உதவிய தமிழர் + "||" + Tamils who helped in Ayodhya case

அயோத்தி வழக்கில் வாதங்களில் உதவிய தமிழர்

அயோத்தி வழக்கில் வாதங்களில் உதவிய தமிழர்
அயோத்தி வழக்கில் வாதங்களில் தமிழர் ஒருவர் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அயோத்தி வழக்கில் ஒரு தரப்பான ராம்லல்லா விராஜ்மான் விக்ரகம் சார்பில் ஆஜராகி வாதிட்டவர்கள் மூத்த வக்கீல்களான கே.பராசரன், சி.எஸ்.வைத்தியநாதன், ரஞ்சித் குமார்.


இவர்களுக்கு பக்க துணையாக இருந்து ஆதாரங்கள், தொல்லியல் துறை ஆவணங்கள், பயண குறிப்புகள், வரைபடங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை திரட்டி தொகுத்து அளித்தவர், தமிழரான வக்கீல் பி.வி.யோகேஸ்வரன்.

தேனி மாவட்டத்தில் உள்ள உப்புக்கோட்டை என்ற சிறிய கிராமத்தை சேர்ந்த இவர், 9 ஆண்டு காலம் மூத்த வக்கீல்களுடன் இணைந்து அயோத்தி வழக்கில் பணியாற்றி இருக்கிறார்.

அயோத்தி வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியான பின்னர் தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தவர்களிடம் மூத்த வக்கீல் கே.பராசரன், “இந்த யோகேஸ்வரனுக்கு முதலில் வாழ்த்து தெரிவியுங்கள். எங்கள் வாதங்களுக்கு இவர்தான் பக்க பலமாக இருந்தார்” என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
அயோத்தி தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
2. அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை - சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அறையில் நடக்கிறது
அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடக்கிறது. இது நீதிபதிகளின் அறைக்குள்ளேயே நடத்தப்படுகிறது.
3. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4. அயோத்தி வழக்கில் இருந்து நீக்கம் முட்டாள்தனமானது - வக்கீல் ராஜீவ் தவான்
அயோத்தி வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் முட்டாள்தனமானது என வக்கீல் ராஜீவ் தவான் கூறி உள்ளார்.
5. அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல்
அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.