தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு + "||" + Increase of security for judges in Ayodhya case

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ஏகமனதாக தீர்ப்பு அளித்தனர்.


இதற்கிடையே, அயோத்தி வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, கடந்த சனிக்கிழமையில் இருந்து, மேற்கண்ட 5 நீதிபதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அவர்களது வீடுகளில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களது வீடுகளுக்கு செல்லும் சாலையில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முன்பு வீடுகளில் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, நடமாடும் பாதுகாப்பு குழுக்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. நீதிபதிகள் வெளியே செல்லும்போது, அவர்களது காருடன் துப்பாக்கி ஏந்திய வீரர்கள், பாதுகாப்பு வாகனத்தில் உடன் செல்வார்கள்.

இதுபற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எந்த நீதிபதிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த அச்சுறுத்தலும் இல்லை“ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா
நடிகை கங்கனா ரணாவத் அயோத்தி வழக்கை படம் எடுக்க உள்ளார்.
2. ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது.
3. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
4. ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
ரியல் எஸ்டேட் அதிபரிடம் பண மோசடி செய்த தாய், மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
5. கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.