உலக செய்திகள்

சிரியாவில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி + "||" + Bomb blast in Syria; 8 killed

சிரியாவில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி

சிரியாவில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி
சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
டமாஸ்கஸ்,

சிரியா நாட்டில் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடகிழக்கு பகுதியில் உள்ள சுலுக் என்ற கிராமத்தில், நேற்று ஒரு பேக்கரிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க்காத நிலையில், துருக்கி அரசாங்கம் குருது போராளிகள் மீது குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வாரம் சிரியா-துருக்கி எல்லைப் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சு
சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் முதல்முறையாக, சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டன.
2. பாகிஸ்தானில் பயங்கரம்: குண்டு வெடிப்பில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாகினர்.
3. சிரியாவில் பயங்கரம்: சந்தையில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி
சிரியா நாட்டின் சந்தையில் குண்டு வெடித்து 40 பேர் பலியாகினர்.
4. சிரியாவில் இஸ்ரேல் வான்தாக்குதலில் 7 பேர் பலி
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...