உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம் + "||" + Wildfires in Australia: Emergency Declaration

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பேரழிவு என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிட்னி,

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. கொழுந்து விட்டு எரியும் இந்தத் தீ அந்தப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

இந்த தீயில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 150 வீடுகளுக்கும் மேல் எரிந்து, இடிந்து தரை மட்டமாகின. பல லட்சம் மரங்கள் கருகிவிட்டன.

இதனையடுத்து இன்று நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த காட்டுத்தீ பேரழிவிற்கான நிலையை அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை இந்த காட்டுத்தீயின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயின் காரணமாக வெப்பம் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியிலும் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. சிட்னி நகரை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் தீ பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2. ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி: 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை
ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி காரணமாக 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.
3. காட்டுத்தீ சோகத்தை போக்க இந்திய அணியை வென்று காட்டுவோம்-ஆஸ்திரேலியா
காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம் என கேப்டன் பிஞ்ச் கூறினார்.
4. தண்ணீரை அதிகம் குடிப்பதாக கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு
தண்ணீரை அதிகம் குடிப்பதாக கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
5. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.