மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி + "||" + Interview with the first-minister of the coalition continues in the local elections as parliamentary elections

நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றிடம் இல்லை

கேள்வி:- அ.தி.மு.க.வில் வெற்றிடம் இருப்பதாக கூறி வருகிறார்களே?


பதில்:- அ.தி.மு.க.வை பொறுத்தவரை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை என்று நிரூபித்து விட்டோம்.

கேள்வி:- புகழேந்தி உள்பட அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைய முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- புகழேந்தி இன்னும் அ.தி.மு.க.வில் இணையவில்லை. அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைய கடிதம் கொடுத்தால் அதுகுறித்து தலைமைக்கழகம் பரிசீலித்து முடிவு செய்யும்.

கூட்டணி தொடரும்

கேள்வி:- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும்?

பதில்:-உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். குறித்தகாலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பீர்கள்?

பதில்:- உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.

கேள்வி:- சென்னையில் மாசு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- சென்னையில் மாசு குறைவு என்று வருவாய்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.

மாமல்லபுரம்

கேள்வி:- மாமல்லபுரத்தை பெரிய சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:-நிச்சயமாக அழகுபடுத்தப்படும். மாமல்லபுரம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து மிகச் சிறப்பாக, அழகாக, தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் உறவினர்கள் கண்ணீர் பேட்டி
மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
2. அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்-அமைச்சர் எச்சரிக்கை
செப்டம்பர் மாதம் வரை தொற்றின் வேகம் அதிகரிக்கும். கொரோனாவை ஒழிப்பதில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
3. ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
4. சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரிகள் செயல்படும் முதல்-அமைச்சர் பேச்சு
சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரிகள் செயல்படும் என்றும், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகை: நெல்லையில் பலத்த பாதுகாப்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.