உலக செய்திகள்

சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டுவெடிப்புகள்; 7 பேர் பலி + "||" + 3 subsequent bombings in Syria; 7 killed

சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டுவெடிப்புகள்; 7 பேர் பலி

சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டுவெடிப்புகள்; 7 பேர் பலி
சிரியாவில் துருக்கி எல்லைப் பகுதிக்கு அருகே நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியாகினர்.
டமாஸ்கஸ்,

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் துருக்கி எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள காமிஷ்லி நகரில், நேற்று அடுத்தடுத்ததாக 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நகரம் குர்துக்கள் அதிகம் வாழும் நகரமாகும்.

இந்த மூன்று குண்டுகளும் நகரின் முக்கிய பகுதிகளில், நின்று கொண்டிருந்த கார்களில் வைக்கப்பட்டிருந்தன. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. கடந்த மாதம் சிரியா எல்லையில் இருந்து குர்து படைகள் பின் வாங்கிய பிறகு இது போன்ற பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் அங்கு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வடமேற்கு சிரியாவில் வன்முறையால் 235,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்
வடமேற்கு சிரியாவின் மீது ராணுவத்தின் கடும் தாக்குதலால் 2.35 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர்.
2. சிரியா அகதிகளின் அதிகமான எண்ணிக்கையை துருக்கியால் கையாள முடியாது - அதிபர் எர்டோகன்
அதிக அளவில் வரும் சிரியா நாட்டின் அகதிகளை துருக்கியால் கையாள முடியாது என்று அந்நாட்டின் அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
3. சிரியா தலைநகரில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி
சிரியாவின் தலைநகரத்தில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பலியானார்.
4. சிரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.
5. ஈராக் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகளால் பதற்றம் - 6 பேர் உடல் சிதறி பலி
ஈராக் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகளால், 6 பேர் உடல் சிதறி பலியாகினர்.