தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை + "||" + Air pollution in Delhi: pollution control board recommendation to close schools

டெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை

டெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை
டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட டெல்லி அரசாங்கத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் காய்ந்த பயிர் தட்டைகள் உள்ளிட்டவற்றை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி என்.சி.ஆர் பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. மேலும் நிலக்கரி மற்றும் இதர எரிபொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் வரும் நவ.15 வரை மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்திலும் காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சுதந்திர தின விழா: டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு
நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
5. டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...