தேசிய செய்திகள்

சென்னையில் காற்று மாசு கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் + "||" + Action against those who fail to control air pollution in Chennai - Filed in National Green Tribunal

சென்னையில் காற்று மாசு கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்

சென்னையில் காற்று மாசு கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்
சென்னையில் காற்று மாசு கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அதேபோல் இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறிய தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார்.


அதில், ‘சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதனால் சென்னையில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, காற்று மாசு தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்க தவறிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை மெட்ரோ பாலிடன் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி, போக்குவரத்து கமிஷனர் உள்ளிட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கனமழையால் காஞ்சிபுரம்,வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
2. சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் உயர்ந்துள்ளது.
3. டெல்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் நேற்று காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
5. டெல்லியில் இன்று காற்று மாசு குறைந்துள்ளது - மத்திய ஆய்வு நிறுவனம் தகவல்
டெல்லியில் இன்று காற்று மாசு குறைந்து காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.