தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கலா? - முஸ்லிம் அமைப்பு இன்று முடிவு + "||" + Will a review petition be filed in Ayodhya verdict? - Muslim organization decided today

அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கலா? - முஸ்லிம் அமைப்பு இன்று முடிவு

அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கலா? - முஸ்லிம் அமைப்பு இன்று முடிவு
அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் அமைப்பு இன்று முடிவு செய்ய உள்ளது.
புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக விளங்கிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம்லல்லாவுக்கு (குழந்தை ராமர்) வழங்க உத்தரவிட்டும், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது.


மசூதி கட்டிக்கொள்ள முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்வது பற்றி முஸ்லிம் அமைப்பான ஜாமியத் உலமா இ இந்த் அமைப்பு, அதன் செயற்குழு கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முடிவு எடுக்கிறது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷாத் மதானி மேலும் கூறுகையில், “எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும் என விரும்பி இருந்தால், நாங்கள் 70 ஆண்டு காலமாக இந்த வழக்கை நடத்தி இருக்க மாட்டோம். நிலத்துக்காக வழக்கை தொடரவில்லை. உரிமைக்காகத்தான் வழக்கை நடத்தினோம். முஸ்லிம்களிடம் போதுமான நிலம் உள்ளது. எங்கள் நிலத்தில்தான் மசூதிகள் கட்டி இருக்கிறோம். இனியும் அப்படியே செய்வோம்” என்று குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 730 பேர் மனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஒரே நாளில் 730 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
2. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, முதல் நாளில் 59 பேர் மனு தாக்கல்
தேனி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
3. அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு: ஸ்ரீ ரவிசங்கரும் எதிர்ப்பு - ‘இரட்டை நிலைப்பாடு’ என சாடல்
அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் இரட்டை நிலைப்பாடு என்று ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
4. அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை - பிரதமர் மோடி கருத்து
அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
5. “தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் எண்ணம் இல்லை” - அயோத்தி தீர்ப்புக்கு சன்னி வக்பு வாரியம் வரவேற்பு
அயோத்தி தீர்ப்புக்கு சன்னி வக்பு வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் எண்ணம் இல்லை என்று அந்த வாரியத்தின் தலைவர் கூறியுள்ளார்.