தேசிய செய்திகள்

அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -நிதின் கட்கரி + "||" + Anything can happen in cricket and politics- Nitin Gadkari

அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -நிதின் கட்கரி

அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -நிதின் கட்கரி
அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மும்பை,

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று டெல்லியில் நடைபெற்ற 39-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை துவங்கி வைத்தார். பின்னர் மராட்டிய மாநிலத்திற்கு சென்ற அவர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மராட்டிய மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சில நேரங்களில் தோற்பது போல் இருக்கும், போட்டியின் முடிவில் திடீரென தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது.

டெல்லியில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறேன். அதனால் மராட்டிய மாநிலத்தில் நடக்கும் அரசியல் பற்றி எனக்கு தெரியாது” என்றார்.

மராட்டிய மாநிலத்தில் பாஜக அல்லாத அரசு அமைந்தால் மும்பையில் நடந்து வரும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிலை என்ன ஆகும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர், “அரசாங்கங்கள் மாறினாலும், திட்டங்கள் தொடரும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. பாஜக, தேசியவாத காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் எதுவாக இருந்தாலும், அரசாங்கத்தை உருவாக்கும் எந்தவொரு கட்சியும் நேர்மறையான கொள்கைகளை ஆதரிக்கும்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அப்ரிடி அதிவேக சதம் அடித்த போது பயன்படுத்திய பேட் இந்திய வீரருடையது: சுவாராஸ்ய தகவல்
கடந்த 1994 ஆம் ஆண்டு 37-பந்துகளில் அப்ரிடி சதம் அடித்ததே அதிவேக சதமாக அப்போது பதிவு செய்யப்பட்டது.
2. இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் : நெஹ்ரா
இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
3. கொரோனா பிரச்சினை நீடித்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பேன்: வார்னர் சொல்கிறார்
கொரோனா பிரச்சினை நீடித்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பேன் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.
4. தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
5. விசா குறித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கேட்பதா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியா பதிலடி
இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விசா பிரச்சினை எதுவும் இருக்காது என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.