உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Indonesia issues tsunami alert after magnitude 7.1 earthquake causes panic

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.
ஜகார்தா, 

இந்தோனேசியாவின் மொலுக்கா தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கல் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.  உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடினர். 

சுனாமி ஏற்பட வாய்ப்பு குறைவாகவே இருக்கின்ற போதிலும், முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டியது அவசியம் என்று   உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. 

 நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.  சுலவேசி தீவுகளில் நிலநடுக்க கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மிகவும் பீதி அடைந்ததாக மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை காண முடிந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
லடாக், கார்கில் பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. ஒடிசாவில் ரிக்டர் 3.6 அளவிளான நிலநடுக்கம்
ஒடிசாவின் ராயகடாவில் ரிக்டர் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்தது; 10 பேர் மாயம்
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் மாயமாகினர்.
4. ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தஜிகிஸ்தானை மையமாக கொண்டு ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. டெல்லி அருகே லேசான நிலநடுக்கம்
டெல்லி அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.