தேசிய செய்திகள்

போலீஸ் அதிகாரியை மிரட்டிய உத்தரபிரதேச பெண் மந்திரி - விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவு + "||" + Uttar Pradesh woman minister threatens police officer - Yogi Adityanath order to investigate

போலீஸ் அதிகாரியை மிரட்டிய உத்தரபிரதேச பெண் மந்திரி - விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவு

போலீஸ் அதிகாரியை மிரட்டிய உத்தரபிரதேச பெண் மந்திரி - விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவு
போலீஸ் அதிகாரிக்கு உத்தரபிரதேச பெண் மந்திரி ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் மோசடியில் ஈடுபட்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபரும், அவரது மகனும் தற்போது சிறையில் உள்ளனர். இந்த நிறுவனம் மீது புதிதாக மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டு உள்ளது.


இதை அறிந்த மாநில மந்திரி சுவாதி சிங், அந்த வழக்கை பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவர் நடத்திய உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த மிரட்டல் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மந்திரி சுவாதி சிங்கை நேற்று தனது வீட்டுக்கு வரவழைத்து கண்டனம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாநில டி.ஜி.பி.க்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை அறிக்கையை விரைவில் தன்னிடம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் சோதனையால் பரபரப்பு
மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு
மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. மின்இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரிடம், நிருபர்கள் என்று மிரட்டிய அண்ணன்-தம்பி கைது
தேனியில் மின்இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியரிடம் தங்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்காக அஜித்பவார் மிரட்டப்பட்டார் - சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி
ஆட்சி அமைப்பதற்காக பாரதீய ஜனதாவுடன் சேருவதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் மிரட்டப்பட்டார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
5. தொழிலதிபரை மிரட்டி ரூ.5 கோடி பறித்த சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு
தொழிலதிபரை மிரட்டி ரூ.5 கோடி பறித்த சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.